Vinayakar Bhakthi Songs Lyrics

  1. Vinayakane Vinai Theerppavane_விநாயகனே வினை தீர்ப்பவனே

“விநாயகனே வினை தீர்ப்பவனே”

இசையமைப்பாளர்: டி.பி.ராமச்சந்திரன்

பாடகர்: சீர்காழி கோவிந்தராஜன்

ஆண் : விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
விநாயகனே வேட்கை தணிவிப்பான்…
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்…
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து…

ஆண் : விநாயகனே வினை தீர்ப்பவனே…
விநாயகனே வினை தீர்ப்பவனே…
வேழ முகத்தோனே ஞால முதல்வனே…
விநாயகனே வினை தீர்ப்பவனே…

ஆண் : குணாநிதியே குருவே சரணம்…
குணாநிதியே குருவே சரணம்…
குறைகள் களைய இதுவே தருணம்…
குறைகள் களைய இதுவே தருணம்…

ஆண் : விநாயகனே வினை தீர்ப்பவனே…
வேழ முகத்தோனே ஞால முதல்வனே…
விநாயகனே வினை தீர்ப்பவனே…

ஆண் : உமாபதியே உலகம் என்றாய்…
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்…
உமாபதியே உலகம் என்றாய்…
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்…

ஆண் : கணநாதனே மாங்கனியை உண்டாய்…
கணநாதனே மாங்கனியை உண்டாய்…
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்…
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்…

ஆண் : விநாயகனே வினை தீர்ப்பவனே…
வேழ முகத்தோனே ஞால முதல்வனே…
விநாயகனே வினை தீர்ப்பவனே…


Loading

Leave your comment...

Your email address will not be published. Required fields are marked *

Related Post